அதிரை நியூஸ்: டிச.09
சவுதி அரேபியா, மதினா நகரின் தெருக்களினுள்ளே காரை ஓட்டிச் சென்ற 14 வயது சிறுவன் மற்றொரு 8 வயது சிறுவன் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்துச் சென்றான். இந்த விபத்தில் சிக்கிய சிறுவன் அதே இடத்தில் உயிரிழக்க, அருகிலிருந்தோர் விபத்து ஏற்படுத்திய சிறுவன் தப்பித்து செல்லும் போது அவனுடைய காரின் பதிவு எண்ணை படமெடுத்தனர்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தி இன்னொரு சிறுவனை கொன்றவனின் தந்தை முறையாக தன் மகனை போலீஸாரிடம் கொண்டு சென்று ஒப்படைத்தார். ஒரு பக்கம் தந்தையின் நியாயமான செயலை சிலர் பாராட்டினாலும் 14 வயது மகனை கார் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக தந்தையையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
இதற்கிடையில், உங்களுடைய குழந்தை 10 வயது ஆகிவிட்டாலேயே அவன் பெரிய மனிதனாக ஆகிவிட்டதாக கருதி வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர், வாகனம் ஓட்டக் கற்றுத்தராதீர் என போலீஸார் பொதுவான வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆனாலும் சவுதியர்கள் தங்களுடைய பிள்ளைகளை மடிவைத்துக் கொண்டு வாகனம் ஓட்ட கற்றுத் தருவது மிக சகஜமாக நடைபெற்று வரும் ஓரு நிகழ்வே.
Sources: sabq news & khaleej times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.