.

Pages

Tuesday, December 4, 2018

எச்சரிக்கை! பரிசோதனைக் கூடங்களில் உருவாக்கப்படும் செயற்கை இறைச்சிகள், ஆசிய நாடுகளுக்கு குறி!

பரிசோதனைக்கூட கோழிக்கறி
அதிரை நியூஸ்: டிச.04
குறிப்பு: இது சீன போலி தயாரிப்புகளைப் பற்றிய பதிவல்ல. இயற்கை உணவுகளுக்கு நிகராக எதுவும் நிகரில்லை என்பதை மனதில் இருத்திக் கொண்டு மேற்கொண்டு படிக்கவும்.

இன்றைய உலகில் ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் டன் அசைவ உணவுகளை மக்கள் உட்கொள்கின்றனர். இதுவே 30 ஆண்டுகளுக்கு முன் இதில் சரிபாதி தேவை தான் இருந்துள்ளது அதாவது ஆண்டுதோறும் மாமிச உணவுகளை உண்போர் அதிகரித்து வருகின்றனர். இவர்களின் வாயையும் வயிற்றையும் நிறைக்க வேறு என்ன புதிய வழிகள் உள்ளன என யோசிக்க ஆரம்பித்தனர் சில கார்ப்பரேட் ஆராய்ச்சியாளர்கள்;.

இத்தனைக்கும் உயிருள்ள ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சிகளுக்கான உயிரினங்கள் வளர்ப்பு உலகின் சீரான பருவநிலை மாற்றங்களுக்கும் சுமார் 14.5 பசுமை வாயு வெளிப்படுத்துதலுக்கும் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.Livestock is contributing to climate change, representing approximately 14.5 per cent of global greenhouse gas emissions and rising

2013 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிசிட் பல்கலைகழகம் முதன்முதலாக செயற்கை மாட்டிறைச்சியை உருவாக்கி அதை பீஃப் பர்கர் என சந்தைப்படுத்தியதன் விளைவாக இதுபோன்ற மாற்று செயற்கை இறைச்சி தயாரிப்புகள் மீது வழமைபோல் டஜன் கணக்கான அமெரிக்க கார்ப்பரேட் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பல முதலீடு செய்யத் துவங்கியது, குறிப்பாக அமெரிக்க சிலிக்கான் வேலியிலிருந்து. The first lab-grown or cell-cultured meat was a beef burger created by scientists at Maastricht University in the Netherlands in 2013. Since then, investment has soared and dozens of US food companies, many in Silicon Valley, are working on alternatives to traditionally reared meat.

நெதர்லாந்தை பின் தொடர்ந்து அமெரிக்காவின் சான் பிரன்ஸிஸ்கோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் கோழி இறகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செல்களை பரிசோதனைக்கூடங்களில் 'திசு வளர்ப்பு தொழிற்நுட்பத்தில் வளர்த்து' செயற்கை கோழிக்கறியை உருவாக்கியுள்ளனர் (Created chicken nuggets grown from stem cells found in a chicken’s feather). இந்த செயற்கை கோழி இறைச்சியை கொண்டு சிக்கன் நக்கட்ஸ் எனப்படும் உணவையும் சந்தைப்படுத்தத் துவங்கியுள்ளனர். இன்னும் 20 வருடங்களுக்கு இச்செயற்கை கோழி உணவுத் தொழிலில் தாங்களே மிகப்பெரும் வர்த்தகர்களாக திகழப் போவதாகவும் இதற்கான வர்த்தக கூட்டு ஒப்பந்தங்கள் பல கையெழுத்திடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு புறம் சைவ உணவு உண்போரை குறிவைத்தும் பல செயற்கை சைவ உணவுகளையும் தயாரிக்கத் துவங்கியுள்ளனர். இவர்கள் சோயா பீன்ஸை அடிப்படையாக கொண்டு தயாரித்துள்ள உணவிலிருந்து இரத்தம் போன்தொரு திரவம் சமைக்கும் போது வெளியாகுமாம், இதனால் அந்த சோயா உணவின் சுவை அசைவ உணவை உண்பதைப் போன்தொரு உணர்வை தருமாம். அமெரிக்காவில் இதுபோன்ற செயற்கை சைவ, அசைவ மாமிச தயாரிப்புக்களுக்கு சுமார் 24 சதவிகிதம் வரை மக்கள் ஆதரவு பெருகியுள்ளதாம். (கார்ப்பரேட்டுகள் இப்படித்தான் கட்டுக்கதைகளை உருவாக்கி பரப்பிவிடும்)

அதேபோல் மாட்டுப்பால் இல்லாமல் தாவரங்களிலிருந்து மாற்றுப்பாலாக உருவாக்கப்படும் ஒரு திரவத்தை கொண்டு பாலாடை கட்டிகள், வெண்ணை, தயிர் மற்றும் ஐஸ் கிரீம் தயாரிப்புக்கள் தயாரிப்பதும் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாம். அதே சமயம் அமெரிக்காவில் சுமார் 5 சதவிகிதமே சைவ உணவு உண்போர்கள் இருப்பதால் இவர்களை மட்டும் நம்பி பயனில்லை என்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.

The companies say they are deliberately targeting consumers who eat meat, since vegetarians and vegans represent less than 5 per cent of the US population. “We applaud the vegans and vegetarians of the world, but they are a tiny fraction of the market,”

அதெல்லாம் சரி அது என்ன எச்சரிக்கை? அமெரிக்காவில் இதுபோன்ற செயற்கை சைவம் மற்றும் அசைவ தயாரிப்புக்களுக்கு அமெரிக்க அரசு ஏகப்பட்ட கெடுபிடிகளை வைத்துள்ளதால் அங்கு வியாபாரம் செய்ய முடியவில்லை என்றும் புலம்பும் இந்த செயற்கை மாமிச தயாரிப்பு வியாபாரிகள் 'எங்களுடைய கடையை ஆசிய நாடுகளில் ஆரம்பிக்கப் போகின்றோம்' எனவும் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளனர். Regulation may pose another roadblock. Although Just is creating its products in the US, it plans to first sell in Asia. It partially blames what it calls an immature regulatory environment in the US. Some progress is being made. The Department of Agriculture and the Food and Drug Administration recently announced they were creating a joint regulatory framework to oversee the production of cell-cultured food products.

இதுபோன்ற செயற்கை சைவ, அசைவ உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் சில... இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸூம் பெரும் பங்குதாரராக உள்ளார்.

Just
Impossible Foods
Nielsen
Beyond Meat
TGI Friday’s
Tesco
Tyson Foods 
Google Ventures and Gates
Tyson Foods

தீவனம் இன்றி, பாரமரிப்பு செலவுகள் இன்றி இவர்கள் தயாரித்து வழங்கும் செயற்கை மாமிச பொருட்களின் விலை வேண்டுமானால் மலிவாக, சுவையாக தெரியலாம் ஆனால் ஒரு போதும் தரமாக, பக்க விளைவுகளாக நோய்களை ஏற்படுத்தாததாக இருக்காது.

வருமுன் விழித்துக் கொள்வோம், விளம்பரங்களை நம்பி ஏமாறாதிருப்போம்.இவர்களைப் போன்ற கார்ப்பரேட்டுகள் இதற்கு முன் சந்தைப்படுத்திய பிராய்லர் கோழிகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளும் மனித குலத்திற்கு ஏற்படுத்தியுள்ள நாசம் நம் கண் முன்னே உள்ள படிப்பினை தரும் உதாரணங்கள் என்பதை மறவாதீர்.

Source: Gulf News 
தமிழில்: நம்ம ஊரான்
நக்கட்ஸ் செயற்கை கோழிக்கறி உணவு
கேஎப்சி போன்ற செயற்கை கோழிக்கறி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.