Pages

Thursday, December 6, 2018

ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிப்பு!

அதிரை நியூஸ்: டிச.06
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு! பங்களாதேஷில் நடைபெற்ற முதலாவது ஆபரேசன்!

பங்களாதேஷில் சுமார் 1 ½ வருடங்களுக்கு முன் பிறந்த இரட்டை சகோதரிகள் தோபா, தகூரா (Tofa and Tahura). இவர்களை டாக்கா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் 2 டஜன் மருத்துவர்கள் சுமார் 9 மணிநேர தொடர் அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக பிரித்தனர். இந்த வகையான அறுவை சிகிச்சை ஒன்று பங்காளதேஷில் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிற்குப் பின் ஒட்டி ஒன்றாக வந்த சகோதரிகள் தனித்தனியே வீடு திரும்பினர். இந்த குழந்தைகள் இனி பிற குழந்தைகளைப் போலவே சாதாரணமாக ஓடி விளையாடலாம், இயல்பாக வளரலாம்.

பங்காளதேஷில் 2015 ஆம் ஆண்டு ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளும், 2016 ஆம் ஆண்டு ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களும் இதுபோன்ற பிரித்தெடுப்பு அறுவை சிகிச்சையின் போது இறந்து போயிருந்தனர்.

குழந்தைகளின் தாய் ஷஹீதா பேகம் கூறியதாவது, எனது குழந்தைகளை மீட்டுத்தந்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும். என் குழந்தைகளை மார்க்கக் கல்வி கற்கச் செய்து சிறந்த முஸ்லீமாக, சிறந்த நற்குணமுள்ள பெண்களாக உருவாக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார். பங்களாதேஷ் போன்றதொரு நாட்டிற்கும் ஏனைய உலகிற்கும் இவரைப் போன்ற நற்குணமுள்ள தாய்மார்கள் அதிகமதிகம் அமைவது அவசியம்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...