Pages

Monday, December 3, 2018

மஜக அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் தேர்வு !

அதிராம்பட்டினம், டிச.03
மனிதநேய ஜனநாயக கட்சி அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் தேர்வு அக்கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பேராவூரணி எஸ்.எம் அப்துல் சலாம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் மன்னை.செல்லச்சாமி, மண்டபம் ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி செயல்பாடுகள் மற்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பது குறித்து எடுத்துரைத்தனர்.

பின்னர், அதிரை பேரூர் செயலாளராக எஸ்.எம் அப்துல் சமது, பொருளாளராக எம்.என் புரோஸ்கான், துணைச்செயலாளர்களாக ஜர்ஜிஸ் அகமது, சாகுல் ஹமீது, இளைஞர் அணி செயலாளராக அஸ்கர் அலி, இளைஞர் அணி துணைச் செயளாலர்களாக பயாஸ் அகமது,
முகமது யாசீன், மருத்துவ அணி செயலாளராக முகமது யூசுப், துணைச் செயலாளராக முகமது கான், மாணவர் இந்தியா அமைப்பின் செயலாளராக
சமீர் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் பைசல் அஹமது, புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்ட துணைச் செயலாளர் அபுதாஹிர், அதிரை சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...