Pages

Sunday, December 9, 2018

துபையிலிருந்து இந்தியாவிற்கு துணையின்றி பயணமாகும் குழந்தைகளுக்கு சேவைக்கட்டணம் விதிப்பு!

அதிரை நியூஸ்: டிச.09
துபையிலிருந்து விமானத்தில் இந்தியாவிற்கு துணையின்றி தனித்து பயணமாகும் குழந்தைகளுக்கு சேவைக்கட்டணம் விதிக்கப்பட உள்ளது.

துபையிலிருந்து (மட்டும்) இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பெற்றோர்கள், காப்பாளர்கள், உதவியாளர்கள் யாருமின்றி தனித்து பயணம் செய்யும் குழந்தைகளுக்கு துபை விமான நிலைய தரைச்சேவைகளை கையாளும் டனட்டா நிறுவனம் (Dnata provides a full range of quality and reliable ground and passenger handling services, including the handling of unaccompanied minor passengers, to airlines operating from the two Dubai airports) விதித்திருக்கும் புதிய சேவைக்கட்டணத்தை ஈடு செய்யும் வகையில் ஒன்வே டிக்கெட்டிற்கு 165 திர்ஹமும், ரிட்டர்ன் டிக்கெட்டிற்கு 330 திர்ஹமும் கூடுதலாக வசூலிக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது உடனடியாக கடந்த டிச. 4 முதல் அமுலுக்கு வந்துள்ளது.

(Consequent to the levy of Unaccompanied Minor (UM) passenger charges by the ground handling agency of Dubai Airport)

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் தனித்து பயணம் செய்யும் குழந்தைகளுக்கான (Unaccompanied Minors from Dubai) டிக்கெட்டுகளை ஏற்கனவே வழமையில் இருக்கும் ஆவணங்களை சமர்ப்பித்தே எடுக்க வேண்டும்.

இந்த டிக்கெட்டுகளை டிராவல் ஏஜென்டுகளிடமோ அல்லது அவர்களின் ஆன்லைன் சேவைகள் வழியாகவோ அல்லது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட் புக்கிங் இணைய தளத்திற்கோ சென்று எடுக்கக்கூடாது, அப்படி எடுத்திருந்தால் அவை செல்லாது, ரத்து செய்ய வேண்டும்.

(As per the circular dated December 4, unaccompanied minor passengers have to issue their tickets only from the city/airport office of AIE and not through travel agent or Air India Express website)

தனித்து பயணம் செய்யும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை வழமையான ஆவணங்களுடன் நகர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகம் அல்லது விமான நிலையத்தில் செயல்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகம் ஆகிய ஏதாவது ஒன்றில் மட்டுமே டிக்கெட் கட்டணத்திற்கு மேல் ஒருவழி பயணத்திற்கு கூடுதலாக 165 திர்ஹம் செலுத்தி எடுக்க வேண்டும்.

ஒருவேளை கூடுதலாக கட்டணம் செலுத்தி எடுக்கப்படும் டிக்கெட்டை ரத்து செய்தால் இந்த சேவைக்கட்டணம் திரும்பத் தரப்படும் அல்லது தேதியை மாற்றி பயணம் செய்தால் புதிய தேதிக்கு ஏற்ப மாற்றித் தரப்படும்.

(If the booking is made through any other channel, then passenger will have to cancel such a booking and re-book at the city/airport office to ensure that the UM charge is collected and documentation executed for the UM at the time of booking,” it added.

The Dh165 fee or equivalent will be added automatically by the system when the booking is done at the city/airport office of AIE.

The charge is refundable when the ticket is cancelled. It will be carried forward during modifications to the ticket)

இந்தத் தொகை ஒவ்வொரு விமான நிறுவனமும் துபை டனட்டாவுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்திற்கு ஏற்ப மாறுபடும் எனத் தெரிகிறது. டனட்டாவுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்து கொண்டுள்ள ஒப்பந்த ஷரத்துக்கள் ரகசியமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(The pricing of dnata’s services is subject to the commercial agreement between the company and the airline customers and fixed in the service contract. The contract terms are confidential between the parties. It is up to the individual airline to determine how fares are structured and payment is collected from the passengers. Passengers should check their airline’s website for further details pertaining to the carriage of unaccompanied minors)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...