Pages

Thursday, December 6, 2018

விசிட் விசாவில் அமீரகம் வரும் இந்திய பெண்களுக்கு வேலைவாய்ப்பு விசா தர வேண்டாம் ~ சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள்!

அதிரை நியூஸ்: டிச.06
அமீரகத்திற்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் இந்தியப் பெண்கள் தவறானவர்களால் ஏமாற்றப்படாமலிருப்பதை தடுக்கும் பொருட்டு விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாக்களில் அமீரகத்திற்கு வந்து வேலை தேடும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு விசா தர வேண்டாம் என சமூக அக்கறையுடன் அமீரக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். அமீரக வேலைவாய்ப்புக்களை பெற விரும்பும் பெண்கள் இந்திய அரசின் ஈ-மைக்ரேட் வழியாக ஒப்புதல் பெற்றே பாதுகாப்புடன் கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்தார்.

India has asked the UAE to prevent Indian women workers coming on visit visa from getting employment visa here, an Indian minister said here on Tuesday evening.

Workers migrating through illegal channels end up with many troubles. “Women among them are the worst affected,”

Sushma Swaraj urged Indian workers to go through legal channel (India’s eMigrate system that controls migration of vulnerable workers) for foreign employment. “Those who use illegal channels often do not know where are they heading to. They don’t know their rights and protective measures available for them,” she said.

மேலும் இன்னொரு மிக முக்கிய முடிவாக இந்தியா மற்றும் அமீரகம் இடையே 35 பில்லியன் ரூபாய்கள் அல்லது 2 பில்லியன் திர்ஹத்திற்கு உட்பட்ட வர்த்தகத்தை 3வது நாட்டு பணங்களின் தலையீடுயின்றி ரூபாய் அல்லது திர்ஹத்தில் மட்டுமே நேரடி வர்த்தகம் செய்திடவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, இதன் மூலம் டாலர், யூரோ போன்ற அந்நிய செலாவணிகள் தவிர்க்கப்பட்டுள்ளது இந்த முடிவு இரு நாடுகளுக்கும் வர்த்தகரீதியாக பயனளிக்கும் ஒன்றாக அமையும். எனினும், ரூபாயா அல்லது திர்ஹமா எதை ஏற்பது என்பதை அந்தந்த வர்த்தக சூழலுக்கு ஏற்றவாறு அமீரக சென்ட்ரல் பேங்க் மட்டுமே முடிவு செய்யும்.

கடந்த 2017 வருடம் இந்தியா மற்றும் அமீரகத்திற்கு இடையே பரஸ்பர இருதரப்பு வர்த்தகம் சுமார் 52 பில்லியன் டாலர் (190.8 பில்லியன் திர்ஹம்) அளவிற்கு நடைபெற்றுள்ளது, இதில் எண்ணெய் அல்லாத வர்த்தகம் மட்டும் சுமார் 34 பில்லியன் டாலர்களாகும்.

கடந்த ஆண்டில் அமீரகத்தில் இந்தியாவின் நேரடி வர்த்தக முதலீடுகள் சுமார் 6.6 பில்லியன் டாலர்களாக உள்ள நிலையில் இந்தியாவில் அமீரகத்தின் நேரடி முதலீடுகள் 5.8 பில்லியன் டாலர்களாக உள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...