Pages

Monday, December 10, 2018

அக்டோபர் மாத மின்கட்டண அறிவிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு ~ ரத்து செய்ய கோரிக்கை!

அதிராம்பட்டினம், டிச.10
அதிராம்பட்டினம் உள்ளிட்ட புயல் பாதிப்படைந்த டெல்டா மாவட்டங்களின் மின்சாரக் கட்டணத்தை முழுவதும் ரத்து செய்யவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கஜா புயல் காரணமாக மின் அளவீடு எடுக்க முடியாத நிலை உள்ளதால் மின்நுகர்வோர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் செலுத்திய அதே தொகையை செலுத்த வேண்டுமெனவும், பின்னர், ஜனவரி 2019 மாதத்தில் மின் அளவீடு எடுக்கும்போது இந்த தொகையை மின்வாரியம் நுகர்வோருக்கு சரிசெய்து கொடுக்கும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில், புயலில் பாதிப்படைந்த பகுதிகளின் மின்நுகர்வோர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் செலுத்திய அதே தொகையை செலுத்த வேண்டும் என்ற மின்வாரிய அறிவிப்பிற்கு பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். புயலில் பாதிப்படைந்த டெல்டா மாவட்டங்களில் இம்மாத மின் கட்டணம் முழுவதையும் ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் கூறியது;
கடந்த அக்டோபர் மாதத்திற்கு முன்பாக கோடை காலமாக இருந்ததால் மின்நுகர்வோர்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தியதன் காரணமாக அதிக மின்கட்டணத்தை செலுத்தினர்.

கஜா புயலுக்கு பின்னர் பாதிப்படைந்த அதிராம்பட்டினம் பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக மின்தடை நீடித்தது. இப்பகுதியை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமப் பகுதிகளில் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. தற்போது மழை ~ குளிர் காலமாக இருப்பதால், மின்நுகர்வோர்கள் அதிக மின்சாரம் பயன்படுத்தாத நிலையில், கடந்த  அக்டோபர் மாதத்தில் செலுத்திய அதே தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவித்திருப்பது பெரும் வேதனை தருவதாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மாதந்தோறும் மின் அளவீடு எடுப்பது நடைமுறையில் இருப்பதால் அங்குள்ள நுகர்வோர்கள் குறைந்த கட்டணமே செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 2 மாதத்திற்கு ஒரு முறை மின் அளவீடு எடுப்பதால், அதிக மின்கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். புயலுக்கு பிறகு டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோரின்  வருவாய்களில் பெரும் இழப்புகள் ஏற்பட்டு, தொழில்கள் முடங்கிக் கிடப்பதால், தற்போது மின்கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே, புயலில் பாதிப்படைந்த டெல்டா மாவட்டங்களில் தற்போதைய மின்கட்டணம் முழுவதையும் அரசு ரத்து செய்து உத்தரவிடவேண்டும்' என்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...