Pages

Tuesday, December 11, 2018

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

பேராவூரணி டிச.11-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கடந்த நவ.16 ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயலால் பேராவூரணி பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போது குடிசை, ஓட்டு வீட்டில் வசிக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே அரசின் நிவாரணம் வழங்கப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள, அரசின் தொகுப்பு வீட்டில் வசிப்போர், மாடி வீட்டில் வசிப்போர் உள்ளிட்ட தரப்பினருக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்படாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கணக்கெடுப்பில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட 16, 17, 18 ஆகிய வார்டுகளில் வசிக்கும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினரில், மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 750 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணப் பெட்டகம் வந்ததாக கூறப்படுகிறது.

இதனா‌ல் அதிருப்தியடைந்த பொன்னாங்கண்ணிக்காடு, மாவடுகுறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 100 பெண்கள் உள்ளிட்ட 250 பேர், செவ்வாயன்று மாலை பேராவூரணி-புதுக்கோட்டை சாலையில் உண்டியல் ஸ்டாப் என்ற இடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அரசு ஏற்கனவே அறிவித்தபடி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த மண்டல துணை வட்டாட்சியர் யுவராஜ், காவல்துறை ஆய்வாளர் பரமானந்தம், உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள், "மாடி வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. குடிசை, ஓட்டு வீடுகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே கிராம நிர்வாக அலுவலர் இங்கு வந்து நிவாரணம் பெறுவோர் பட்டியலை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

இதையடுத்து பேராவூரணி வருவாய் ஆய்வாளர் அஷ்ரப் அலி பொதுமக்களிடம் கூறுகையில்," 1,032 குடும்பங்கள் நிவாரணம் வழங்க தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் 859 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வந்துள்ளது. சிலருக்கு ஆதார் அட்டை, வங்கி கணக்கு தவறுகளால் விடுபட்டவர்களுக்கு மறு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர் செய்தனர். போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...