Pages

Tuesday, December 4, 2018

அதிரையில் கூரை வீடுகள் சீரமைப்பு பணிக்காக கஜா புயல் புனரமைப்புக் குழு உருவாக்கம்!

அதிராம்பட்டினம், டிச.04
கஜா புயலில் அதிரையில் பாதிப்படைந்த கூரை வீடுகளை மறு சீரமைப்பது தொடர்பாக, அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத்தார்கள், சமுதாய அமைப்புகள், நற்பணி சங்க நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம், அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் (டிச.03) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து அறிமுக உரை நிகழ்த்தினார். ஏ.ஜெ ஜியாவுதீன் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் கஜா புயலால் அதிரையில் பாதிப்படைந்த கூரை வீடுகள் மறு சீரமைக்கும் புனரமைப்பு பணிக்காக 16 பேர் கொண்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்ட முடிவில் முகமது இப்ராஹீம் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...