Pages

Monday, December 17, 2018

துபையில் அட்னாக் நிறுவன முதலாவது பெட்ரோல் நிலையம் திறப்பு!

அதிரை நியூஸ்: டிச.17
துபையில் ஈனாக் (ENOC) மற்றும் எப்கோ (EPPCO) பெட்ரோல் நிரப்பு நிலையங்களே செயல்பட்டு வரும் நிலையில் அபுதாபி எமிரேட்டின் அட்னாக் (ADNOC) தனது முதலாவது பெட்ரோல் பங்க்கை துபை இன்வெஸ்ட்மென்ட் பார்க் (DIP) ஏரியாவில் திறந்துள்ளது.

முன்னதாக, 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் சவுதி மற்றும் துபையில் அட்னாக் பெட்ரோல் பங்க்குகளை திறந்திட இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் தற்போது துபையில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் நிலையம் முழுமையாக சூரிய ஒளி மின்சக்தியில் இயங்குவதுடன் ஒரே நேரத்தில் 2 மின்சக்தி கார்களை 20 நிமிடங்களில் ரீ-சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. இங்கு ஜீயான்ட் எக்ஸ்பிரஸ் கடை, ஓயஸிஸ் காபி ஹவுஸ், முழுமையான அட்னாக் லூப்ரிகான்ட் சர்வீஸ் சென்டர், இலவச வைபை வசதியும் செய்யப்பட்டுள்ளதுடன் மெக்டொனால்ட்ஸ் மற்றும் ஒரு கேஎப்சி உணவகம் ஒன்றும் விரைவில் அமையவுள்ளது.

(A Géant Express convenience store, an Oasis Café, full Adnoc Lube services, and free Wi-Fi. McDonalds and KFC outlets will be opening in the coming weeks)

அப்போ அந்த சர்வீஸ் காசு???? இருக்கு, இருக்கு... தற்போதைக்கு ப்ரீ. இன்னும் கொஞ்ச நாள்ள அபுதாபியில் உள்ளது போல் நீங்களாக பெட்ரோலை நிரப்பிக் கொண்டால் சேவை கட்டணம் இல்லை, அங்குள்ள ஊழியர்கள் நிரப்பினால் கூடுதலாக ஒரு தடவைக்கு 10 திர்ஹம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும், இதோ துபைக்கும் கொண்டு வந்துட்டோம்ல!

(Adnoc Distribution will roll out its Flex service across Dubai in the coming months following an initial free trial period which will enable customers to familiarize themselves with the fuelling choices)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...