.

Pages

Monday, December 3, 2018

இங்கிலீஷ் புரியாமல் பீஹார் மாநிலத்தில் ஒருவரை கைது செய்த 'நீட்' போலீஸ்!

அதிரை நியூஸ்: டிச.03
பீஹார் மாநிலம் ஜெகன்னாபாத் மாவட்டம் மக்தூம்பூரைச் சேர்ந்தவர்கள் நீரஜ் குமார், ரெனு தேவி தம்பதியர். இவர்களுக்கிடையே தொடர் பிரச்சனை நிலவியதால் விவாகரத்துக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில், இந்தியாவில் நிலவும் வழமைக்கு ஏற்ப கணவன் தன்னை அடித்து துன்புறுத்தி வரதட்சணை கேட்டு மனம் மற்றும் உடல்ரீதியாக கொடுமைபடுத்தி வருவதாகவும் ரெனு தேவி ஒரு வழக்கும் தொடுத்து வைத்துள்ளார், அது உண்மையா பொய்யா என்பது அல்ல சப்ஜெக்ட்.

மாநிலத் தலைநகர் பட்னாவில் இயங்கும் குடும்ப நல நீதிமன்ற கணவர் நீரஜ் குமார் இறுதித்தீர்ப்பு வரும் வரை மனைவியின் செலவினங்களுக்காக மாதாமாதம் 2,500 ரூபாயை வழங்கி வர வேண்டும் என இங்கிலீஷில் உத்தரவிடுகின்றது அதாவது இப்படி! “warrant to enforce payment of maintenance” இங்கு தான் ஆரம்பித்தது நீரஜ் குமாருக்கு பிரச்சனை.

பாட்னா குடும்ப நல நீதிமன்ற உத்தரவை இப்படி “warrant of arrest” என புரிந்து கொண்ட மக்தூம்பூர் போலீஸ் நிலைய அதிகாரிகள் வாரண்ட் (Warrant) என்ற வார்த்தை வந்திருந்தாலே அதற்கு அர்த்தம் கைது (Arrest) தான் என முடிவு செய்து நீரஜ் குமார் தன் கடையில் வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டு இருந்த போது கொத்தாக தூக்கிக் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்து போலீஸ் நிலைய கஸ்டடி அறையில் அடைக்கின்றனர்.

நீரஜ் குமார் எவ்வளவோ விளக்கம் சொல்லுகின்றார், தனது வக்கீலுடன் பேச வேண்டும் என்கிறார், அவை அனைத்தும் செவிடன்கள் காதில் ஊதிய சங்காகவே முடிகின்றது. 24 மணிநேரத்திற்குப் பின் அடுத்த நாள் தங்களுடைய கடமையை செவ்வனே செய்த பூரிப்புடன் பாட்னா குடும்ப நல நீதிமன்றத்தில் நீரஜ் குமாரை ஆஜர்படுத்தினர் போலீஸார்.

மக்தூம்பூர் போலீஸாரின் முட்டாள்தனத்தை அறிந்த நீதிபதி, காண்டாகி போய் போலீஸாரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி, உடனடியாக நீரஜ் குமாரை அவருடைய வீட்டில் கொண்டு போய் விடுமாறு உத்தரவிட்டனர். இந்த லட்சணத்தில் ஆங்கில அறிவை கொண்டுள்ள வடநாட்டினர் தான்
தமிழர்களாகிய நம் மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு வைத்து வருடந்தோறும் நம் குழந்தைகளை கொன்று வருகின்றனர். (மக்களின் அறியாமைக்கு அவர்களை ஆண்ட, ஆளும் அரசுகளே முழுமுதற் காரணம்)

மேலும் சமீபத்தில் திறக்கப்பட்ட 3,000 கோடி ரூபாய் வெட்டி செலவான பட்டேல் சிலையின் கீழ் Statue of Unity என்பதை 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' என தமிழை? படுத்தி வைத்திருந்தனர் இந்த 'நீட்' கோஷ்டியினர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.