பட்டுக்கோட்டை, டிச.16
பட்டுக்கோட்டை காந்தி சிலை அருகில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரியில் கடந்த 2 மாதமாக நடைபெற்று வரும் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவத்தில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை கோரி தர்மபுரி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளிடம் அராஜகப் போக்குடன் நடந்து கொண்ட தர்மபுரி போலீஸாரைக் கண்டித்தும், கிரிமினல் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் அகமது தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் எஸ்.கந்தசாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச்செயலர் பி.எம்.இளங்கோவன் ஆகியோர் பேசினர். சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தலைவர் ஜலீல் முகைதீன், பட்டுக்கோட்டை நகரத்தலைவர் குமரேசன், முருகேசன், ஜமால் முஹமது உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.