.

Pages

Monday, December 24, 2018

சிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்வக்குழு!

அதிரை நியூஸ்: டிச.24
சிங்கப்பூர் மிகச்சிறிய ஆனால் பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்தோங்கியுள்ள நாடு என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் ஆனால் அவர்கள் 'ஒரு கல்லில் இரு மாங்காய்' என்ற அடிப்படையில் தங்கள் நாட்டை தொடர்ந்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கவும் அதேவேளை பிறருக்கு வழங்கி மனம் மகிழவும் புதியதோர் வழியை தேர்ந்தெடுத்து அசத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்காகவே அருகில் ஒரு செயற்கை தீவை உருவாக்கி வைத்துள்ளது அரசு. இந்தத் தீவு எதிர்வரும் 2050 ஆண்டுகளில் தான் இதன் முழுகொள்ளளவை அடையும் என எதிர்பார்த்த நிலையில் முன்னதாகவே அதாவது 2035 ஆம் ஆண்டுகளிலேயே நிரம்பிவிடும் என அதிர்ச்சியான கணிப்பும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் சிங்கைவாழ் வெளிநாட்டினர் என சுமார் 6,500 பேரை உறுப்பினர்களாக கொண்ட 'ப்ரீகேன் இன் சிங்கப்பூர்' ( Freegan in Singapore) என்ற முகநூல் அங்கத்தினர்கள் சிங்கப்பூர் மக்கள் உபயோகப்படுத்திய ஆடை அணிகலன்கள், பெண்களின் கைப்பைகள், மின்சாதனங்கள், பலவகையான வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவற்றை சேகரித்து அதன் போட்டோக்களையும் தகவல்களின் முகநூலில் வெளியிடுகின்றனர்.

இந்தப் பொருட்களை சிங்கப்பூரில் வேலை செய்யும் ஏழ்மையான வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் பெற்று தங்களின் நாடுகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதே முகநூல் குழுமம் வருடத்திற்கு ஒருமுறை அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தியும் மிகவும் நல்ல நிலையில் உள்ள ஆடம்பர பொருட்களை மேற்படி வெளிநாட்டினருக்கு பரிசுகளாக வழங்குகின்றனர். இதன் மூலம் சிங்கப்பூர் மேலும் மேலும் குப்பைகளை சுமக்காமல் சுத்தமாகின்றது, வாங்க வசதியற்ற எளியவர்களின் முகத்திலும் புன்னகையையும் வரவழைக்க முடிகின்றது.

மேலும் இந்த ப்ரீகேன்ஸ் குழுவினர் சிங்கப்பூரிலுள்ள பசீர் பன்ஜாங் என்கிற மொத்த வியாபார மையத்தில் வியாபாரிகளால் கழிக்கப்படும் காய்கறி, பழங்களையும் பெற்றுவந்து வந்து தரம்பார்த்து 'அனைவருக்கும் உணவு' என்ற திட்டத்தின் கீழ் தினமும் ஏழைகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.

Produce, which was rejected by suppliers at Pasir Panjang Wholesale Center and given to a food rescue group started by freegans, is distributed for free to residents by the charity Free Food For All, in Singapore.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.