Pages

Thursday, December 6, 2018

வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால் விமான கட்டணம் உயரும் அபாயம்!

அதிரை நியூஸ்: டிச.06
பல விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால் வளைகுடா நாடுகளுக்கான விமான கட்டணம் உயரும் அபாயம்

நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ போன்ற தனியார் விமான நிறுவனங்கள் பல வளைகுடா சேவைகளை ரத்து செய்துள்ளதால் இந்தியா மற்றும் வளைகுடா அரபு நாடுகள் இடையேயான விமானக் கட்டணங்கள் உயரலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்து வரும் விமான எரிபொருள் கட்டணம், நாள்தோறும் சரிந்து வரும் இந்திய பணமதிப்பிழப்பு மற்றும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள வர்த்தக சரிவு, வேலையிழப்பு போன்றவையே முக்கிய காரணங்களாக கணிக்கப்பட்டுள்ளன.

ஜெட் ஏர்வேஸ் மற்றும் இன்டிகோ விமான நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து தோஹா, மஸ்கட், அபுதாபி மற்றும் துபைக்கான வாரத்திற்கு 39 விமான சேவைகளை இன்று டிச. 5 முதல் ரத்து செய்கின்றன. குறிப்பாக கீழ்க்காணும் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜெட் ஏர்வேஸ்:
தோஹா – திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு
அபுதாபி – லக்னோ, மங்களூர்
துபை – மங்களூர்
மஸ்கட் - திருவனந்தபுரம், கொச்சி
ஓமன் - நேரடி மும்பை மற்றும் டெல்லி சேவைகளும் விரைவில் ரத்து செய்யப்படவுள்ளன.

இன்டிகோ:
ஓமனிலிருந்து சென்னை மற்றும் கோழிக்கோடு சேவைகளை நிறுத்தியுள்ளது. தற்போது  மும்பை,  கொச்சி, அஹமதாபாத் நகரங்களுக்கு மட்டுமே சேவையை தொடர்கின்றது.

இந்த விமான சேவை குறைப்புகளால் ஒருபுறம் விமான கட்டணங்கள் உயர்வதுடன் கனெக்டிங் பிளைட்டுகளுக்கான காத்திருப்பு நேரங்களும் அதிகரிக்கும் இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து எதிர்வரும் 2019 பிப்ரவரி துவங்கி ஏப்ரல் வரையிலான கோடைகால விடுமுறைக்கு நாட்டிற்குச் செல்லும் பயணிகள், குடும்பத்தோடு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...