Pages

Monday, December 3, 2018

தொற்று நோய் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் ~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் தொடர்பான புகார்களை 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,  தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவம் மற்றும் சுகாதார வசதி கிடைத்திடவும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு  திட்டம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இதுவரை 603 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1,16,609 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  மருத்துவ முகாம்களில் இலவச மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், நிலவேம்பு கசாயம் மற்றும் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் மற்றும் இதர சுகாதார புகார்கள் குறித்து 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...