Pages

Tuesday, December 4, 2018

ஆட்சியரகத்தில் குடும்ப அட்டையை ஒப்படைக்க வந்த காந்தி நகர் மக்கள் ~ புயல் பாதிப்பை பார்க்க வராததால் அதிருப்தி!

அதிராம்பட்டினம் காந்தி நகர் மீனவ கிராமத்தில் புயல் பாதிப்பை பார்க்க அலுவலர்கள் வராததால் அதிருப்தியடைந்த மக்கள் ஆட்சியரகத்தில் குடும்ப அட்டையை ஒப்படைப்பதற்காக திங்கள்கிழமை வந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காந்தி நகரில் 300 குடும்பங்கள் உள்ளன. இதில், ஏறத்தாழ 1,000 பேர் வசிக்கின்றனர். கஜா புயலால் இக்கிராமத்தில் கடல் அலையும் உயர்ந்து குடியிருப்புப் பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், படகுகளும், மீன் பிடி வலைகளும் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் காற்றால் சூறையாடப்பட்டன.

இச்சம்பவத்தால் எங்களது பகுதி முழுவதும் நிலைகுலைந்தது. ஆனால், எங்களுக்கென தனி நிவாரண முகாம் அமைக்கப்படவில்லை. காந்தி நகர் பகுதியை இதுவரை அரசு அலுவலர்களும் வந்து பாதிப்புகளைப் பார்வையிடவில்லை. மேலும், இக்கிராமத்துக்குள் எவ்வித பேரிடர் அமைப்புகளும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட குழுக்களும் வரவில்லை.

கஜா புயல் வந்த நாள் முதல் இதுவரை எங்களைக் கண்டு கொள்ளாத அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எங்களுடைய அவல நிலையைப் புரிய வைக்க முடியவில்லை. இதுதொடர்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தியும் அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்பதற்காக வந்தோம் என்றனர்.
பின்னர், ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தனர். அப்போது, காந்தி நகர் கிராமத்துக்கு ஆட்சியர் விரைவில் வருவார் என அலுவலர்கள் கூறியதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் கலைந்து சென்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...