Pages

Friday, December 7, 2018

மலேசியாவில் நடந்த கராத்தே போட்டியில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவி சாதனை!

அதிராம்பட்டினம், டிச.07
மலேசியா கல்வித்துறை சார்பில், உலக அளவிலான கராத்தே போட்டி மலேசியா கோலாலம்பூர் விளையாட்டு அரங்கில் டிச.3ந் தேதி நடைபெற்றது. இதில், உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பலர் கலந்துகொண்டு விளையாடினர். தமிழகத்தின் சார்பில், 12 வயதிற்கு உட்பட்ட சண்டை மற்றும் கட்டா ஆகிய பிரிவு போட்டிகளில், அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி என். சிம்லா தேவி கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்து வெண்கல பதக்கங்கள் வென்றார்.

இதையடுத்து, பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், சாதனை நிகழ்த்திய மாணவி, கராத்தே பயிற்சியாளர் என்,நாடிமுத்து ஆகியோரை, பள்ளித் தாளாளர் வீ.சுப்ரமணியன், பள்ளி முதல்வர் என்.ரகுபதி, பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன், உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...