Pages

Sunday, December 9, 2018

அமீரகத்தில் இருந்து அதிக பணவரத்து பெறும் நாடுகளில் இந்தியா முதலிடம்!

அதிரை நியூஸ்: டிச.09
அமீரகத்திலிருந்து அன்னிய செலாவணியை அதிகம் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

அமீரகத்தில் சுமார் 30 லட்சம் (3 மில்லியன்) இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில் மற்ற எந்த நாட்டினரையும் விட அதிகமான அன்னியச் செலாவணியை இந்தியாவிற்கு அனுப்பித் தருபவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

அமீரகத்திலிருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு 62.7 பில்லியன் டாலர்களும், 2017 ஆம் ஆண்டு 65.3 பில்லியன் டாலர்களும் அனுப்பப்பட்டுள்ள நிலையில் நடப்பு 2018 ஆம் ஆண்டு இது சுமார் 80 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு அடுத்து சீனா 67 பில்லியன் டாலர்கள், மெக்ஸிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் தலா சுமார் 34 பில்லியன் டாலர்கள், எகிப்து சுமார் 26 பில்லியன் டாலர்களையும் அன்னிய வருவாயாக தங்களின் நாடுகளுக்கு அள்ளி வழங்கியுள்ளன.

அமீரகத்தில் வேலைவாய்ப்புக்களை பெற்றுள்ள வெளிநாட்டவர்களில் இந்தியர்களே மிக அதிகமானவர்கள்.உலக வங்கியின் அறிக்கையின் படியும், தெற்காசிய நாடுகளிலேயே அதிகளவில் மனித வளத்தை (தொழிலாளர்கள் மற்றும் இதர ஊழியர்களை) ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியாவே முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் சுமார் 22.5 சதவிகித  தொழிலாளர்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் பங்களாதேஷிலிருந்து 17.9 சதவிகிதமும், பாகிஸ்தானிலிருந்து 6.2 சதவிகிதமுமே மனித வளங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, இந்தியா பெறும் ஒட்டுமொத்த அன்னியச் செலவணி வருவாயில் சுமார் 26.9 சதவிகிதம் அமீரகத்திலிருந்தே வருகின்றது. இதற்கு அடுத்து அமெரிக்காவிலிருந்து 22.9 சதவிகிதமும் சவுதியிலிருந்து 11.6 சதவிகிதமும் வருகின்றதென தெரிவித்துள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...