Pages

Sunday, December 9, 2018

அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்திநகர், ஏரிப்புறக்கரை பகுதியில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்தி நகர், ஏரிபுறக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் சேதமடைந்த படகுகளை அரசின் நிவாரண உதவி பெற்ற மீனவர்களின் படகு பழுது பார்க்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (09.12.2018) நேரில் பார்வையிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.  அதனடிப்படையில் கஜா புயலினால் பகுதி சேதமடைந்த படகுகளுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வீதம் மீன் பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறை சார்பில் நேரடியாக மீனவர்களின் வங்கிக் கணக்கில் நிவாரணத் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. 

நிவாரண உதவித்தொகை பெற்ற மீனவர்கள் தங்கள் படகுகளை  நிவாரண உதவி தொகையினை கொண்டு மறு சீரமைப்பு பணி மேற்கொள்வதனை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மீனவர்கள் கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளதால் நிவாரண தொகையினை உயர்த்தி வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை அரசிடம் பரிந்துரை செய்யப்படுமென ஆட்சியர் தெரிவித்தார். தற்பொழுது மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனரா எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார்.

முன்னதாக, மதுக்கூர் பட்டுக்கோட்டை சாலைகளிலும், பட்டுக்கோட்டை –ஒரத்தநாடு சாலைகளிலும் கஜா புயலினால் சேதமடைந்த மின் கம்பங்களுக்கு புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருவதையும், மின் கம்பிகள்  சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு பணியாளர்களிடம் பாதுகாப்பாக பணிகள் மேற்கொள்ளவும், விரைவாக செய்திடவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மின் வளத்துறை உதவி இயக்குநர் சின்ன குப்பன்  மற்றும் பலர் உடன் இருந்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...