.

Pages

Thursday, December 6, 2018

இறந்த பெண்ணின் கருப்பையை பெற்று குழந்தை பிரசவித்த முதலாவது பெண்!

அதிரை நியூஸ்: டிச.06
மருத்துவ அறிவியல் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தவல்லது. சில பெண்கள் பல்வேறு உடற்குறைபாடுகளால் குழந்தையை பெற்றுக்கொள்ள இயலாதிருப்பர். இவர்களைப் போன்ற பெண்களுக்கு ஓர் சுபச்செய்தியாக வெளிவந்துள்ளது இறந்த பெண்ணின் கருப்பையை தானாமாக பெற்ற பிரேசில் நாட்டுப்பெண் பெற்றெடுத்த குழந்தை பற்றிய செய்தி. இந்த மருத்துவ சாதனையை நிகழ்த்தியவர் டாக்டர் . டானி எஜ்ஸென்பெர்க். (Dr. Dani Ejzenberg)

டாக்டர். டானிக்கு முன்னோடியாக இருந்தவர் இதற்கு முன் உயிருடன் உள்ளவர்களிடமிருந்து தானமாக பெற்ற கருப்பைகளை கொண்டு 8 குழந்தைகளை பிரசவிக்கச் செய்ய சுவீடனைச் சேர்ந்த டாக்டர். மாட்ஸ் பிரான்ஸ்ட்ராம் (Swedish doctor Mats Brannstrom) என்பவராவார். மேலும் 2 குழந்தைகள் இதேமுறையில் அமெரிக்கா டெக்ஸாஸில் உள்ள பேய்லோர் பல்கலைக்கழக மெடிக்கல் சென்டரிலும் (Baylor University Medical Center in Texas), செர்பியா நாட்டில் ஒன்றும் பிறந்துள்ளன

இந்த சம்பவத்திற்கு முன் 11 பேர் இதுபோல் உயிருடன் வாழும் உறவினர்கள், நண்பர்களிடமிருந்து தானாமாக பெற்ற கருப்பையின் மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர் என்றாலும் இறந்துபோன பெண்மணி ஒருவரிடமிருந்த அகற்றப்பட்ட கருப்பையின் பொருத்தி குழந்தை பெற்றெடுப்பது இதுவே உலகில் முதன்முறை, இதற்கு முன் 10 முறை இறந்த பெண்களின் கருப்பையை பொருத்தி குழந்தை பெற வைக்க அமெரிக்கா, துருக்கி மற்றும் செக் ரிபப்ளிக் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

பிரேசிலை சேர்ந்த இந்த 32 வயது பெண் ஒருவர் பிறப்பிலேயே கருப்பை குறைபாடுடன் பிறந்தார். இவருக்கு 3 குழந்தைகளுக்கு தாயான 45 வயதில் மாரடைப்பால் இறந்த பெண்மணியின் கருப்பையை சுமார் 8 மணிநேரம் ஐஸ் பெட்டியில் வைத்து பாதுகாத்தப்பின் பொருத்தப்பட்டு 7 மாத மருத்துவ கண்காணிப்பிற்குப் பின்  vitro fertilization  தொழிற்நுட்பத்தின் மூலம் கர்ப்பம் தரிக்கச் செய்யப்பட்டார். இறுதியாக சிசேரியன் ஆபரேசன் மூலம் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார், தற்போது தாயும் சேயும் நலம்.

இந்த பரிசோதனை முயற்சியின் மூலம் இறந்த பெண்களின் கருப்பையை வெற்றிகரமாக குறைபாடுடைய பெண்களுக்கு பொருத்தி அவர்களையும் தாய்மையடையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.