Pages

Friday, December 7, 2018

கஜா புயல் நிவாரணப்பணிக்கான கணினி பதிவேற்றம் ~ ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து கணினி பதிவேற்ற பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (07.12.2018) நேரில் பார்வையிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகளில் பிற மாவட்ட அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், குடிசைகள் வீடுகள் பாதிப்பு, தென்னை மற்றும் வாழை மரங்கள் பாதிப்பு, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறை, வேளாண் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பிற்கு பிறகு கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி இரவு பகலாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் மேம்பாடு குறித்து இன்று ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  இப்பணிகள் விரைந்து முடித்து பாதிக்கப்பட்ட அனைத்து  பொது மக்களுக்கும் விரைவாக நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, துணை ஆட்சியர் (பயிற்சி) ஸ்ரீதேவி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

1 comment:

  1. விரைவாக இது நடந்தால் நல்ல விஷயம்...நல்லதே நடக்கட்டும்
    அன்புடன் அப்டா அன்சாரி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...