Pages

Sunday, December 2, 2018

அதிராம்பட்டினம் பகுதியில் மின்விநியோக சீரமைப்பு பணிகள் ஆய்வு (படங்கள்)

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் அருகே உள்ள உள்ளூர் புதுக்கோட்டை, மகிழங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மின்விநியோக சீரமைப்பு பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி இன்று (2.12.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமீபத்தில் வீசிய கஜா புயலினால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் கிராமத்தில் மின்விநியோக சீரமைப்பு பணிகளில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பார்வையிட்டு, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அங்கு பணியில் ஈடுபட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்த மின்வாரிய பணியாளர்கள் தங்களுக்கு பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்குவதாகவும், அதிராம்பட்டினம் பகுதியில் மின்விநியோக பணியினை விரைந்து முடித்ததற்காக விருந்து வைத்து சிறப்பித்ததாகவும் மின்பணியாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
   
அதனைத் தொடர்ந்து, அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு பகுதியில் பழுதடைந்த மின்மாற்றி கட்டமைப்பை புதுப்பிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை பார்வையிட்டார்.

பின்னர் மின்வாரிய அலுவலர்களிடம் அமைச்சர் பேசுகையில், தேவைக்கேற்ப அதிக அளவில் வெளிமாவட்ட பணியாளர்களை ஈடுபடுத்தி மின்சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
   
இந்த ஆய்வுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி), மின் தொடரமைப்புக்கழக இயக்குநர் டி.செந்தில்வேலன், மின் பகிர்மான கழக இயக்குநர் எம்.ஏ.ஹெலன் உள்பட அரசு அலுவலர்கள், மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...