Pages

Sunday, December 9, 2018

அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு கட்டுப்பாடு பணிகள் தீவிரம்!

அதிராம்பட்டினம், டிச.09
கஜா புயலுக்கு பின்னர் அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் டெங்கு கட்டுப்பாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர். ஐ.ரவீந்திரன் வழிகாட்டுதல் படி, பட்டுக்கோட்டை வட்டாரப்பகுதியில், மாவட்ட பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் டெங்கு கட்டுப்பாட்டு முன்னேற்பாடுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பட்டுக்கோட்டை வட்டார பகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் டாக்டர் விஸ்வாசந்திரன் டாக்டர் ஜோதிவாசு, டாக்டர் கோவிந்தராசு ஆகியோர் அடங்கிய சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மற்றும் தற்காலிக களப்பணியாளர்கள் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு முன்னேற்பாடுப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தற்காலிக களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகள் மற்றும் எவரேனும் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று ஆய்வு செய்தனர். கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறிந்து, அங்கு, 'அபேட்' மருந்து தெளித்தல், பிளிச்சிங் பவுடர் தெளித்தல், முதிர்வு கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட கொசுப் புழு ஒழிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல், குப்பைகள் அகற்றுதல், கழிவு நீர் வாய்க்கால் அடைப்புகள் சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்றன.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...