Pages

Saturday, December 15, 2018

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அதிரையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.15
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை கண்டுகொள்ளாத  மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் எஸ். மீரா சாஹிப் தலைமை வகித்தார்.

அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன் பேசுகையில்;
'கஜா புயல் பாதித்த தமிழகத்தை தேசிய பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் நிவாரண உதவியாக 20 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் அனைவருக்கும் வழங்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும். புயலில் சேதமடைந்த மீனவப் படகுகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். நவம்பர் மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக ஐக்கிய தேசிய மக்கள் கட்சி நிறுவனர் அதிரை எம். முகமது இப்ராஹீம் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலர் தேவராஜ், இணைச்செயலர் சிவக்குமார். பேராவூரணி செயலர் தங்கராசு, ஒருங்கிணைப்பாளர் கலையரசன், இணைத்தலைவர் ஆறுமுகம், அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் முனாப், முகமது தம்பி, பஷீர் அகமது,  சாகுல் ஹமீது, மல்லிபட்டினம் லுக்மான் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...