புனித கஃபாவின் மதாஃப் (mataf) பகுதியில் 2 மணிநேரம் மாற்றுத் திறனாளிகள் மட்டும் தவாப் சுற்ற நேற்று மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொது சபையின் சார்பாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 3 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று (டிச.3, திங்கள்) 2 மணிநேரங்கள் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே புனித கஃபாவின் மதாஃப் (mataf) பகுதியில் தவாப் செய்திட ஏதுவாக சிறப்பு நேரம் ஒதுக்கித் தரப்பட்டது, இதன் மூலம் மாற்றுத் திறனாளிகளின் மீதான சமூகப் பார்வையை ஈர்க்க முடியும் என நம்புவதாக இரு புனிதப் பள்ளிகளுக்கான நிர்வாகத் தலைமையகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் மாற்றுத் திறனாளிகள் விமான பயணம் செய்ய நேர்ந்தால் அவர்களுக்கும் அவர்களுடன் வரும் உதவியாளர் ஒருவருக்கும் தலா 50 சதவிகிதம் கட்டணம் செலுத்தினால் போதுமானாது, அவர்கள் விரும்பும் அனைத்து வகையான கல்வியை பயிலவும், வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளவும், பொது இடங்களில் பிறரைப் போலவே பிரவேசிக்கவும் உரிமை பெற்றுள்ளனர். அதேபோல் வாகன நிறுத்துமிடங்களில் சிறப்பு ஒதுக்கீடும், தங்களுடைய மோட்டார் வாகனங்களை மாற்றுத் திறனாளிகள் இயக்குவதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள தலா 10,000 ரியால்களை மானியமாகவும் பெற்று வருகின்றனர். பிறப்பு அடிப்படையில் மற்றும் இடையில் மாற்றுத் திறனாளியானவர்களுக்கும் மேற்படி சலுகைகள் கிடைப்பதுடன் சமூக பாதுகாப்பு உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் கண்பார்வையை இழந்தவர்கள், காது கேளாதவர்கள் மற்றும் கை, கால் ஊனமுற்றவர்களுக்காக சவுதியின் கல்வி அமைச்சகம், சமூக நல அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் போன்றவை பல்வேறு கல்வி நிறுவனங்கள், உதவி மையங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்களும் பல்வேறு அற நிலையங்களை மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டிற்காக நடத்தி வருகின்றன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
அது "மடஃப்" அல்ல...
ReplyDelete"மதாஃப்" (தவாஃப் சுற்றும் இடம்) என்பதாகும்...