Pages

Wednesday, December 12, 2018

PFI சார்பில் அதிரையில் முதல் கட்டமாக 25 வீடுகள் புனரமைக்கும் பணி தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.12
பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் சார்பில், கஜா புயலில் பாதிப்படைந்த கூரை வீடுகள் புனரமைக்கும் முதல் கட்டப்பணி அதிராம்பட்டினத்தில் இன்று வியாழக்கிழமை தொடங்கியது.

அவ்வமைப்பின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், கஜா புயலால் பாதிப்படைந்த வீடுகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, புயலில் கூரை வீடுகளை இழந்து பிற இடங்களில் வசிக்கும் 25 குடும்பங்கள் கண்டறியப்பட்டு, வீடுகள் புனரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில், சின்ன தைக்கால் தெரு, மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில்  தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை அவ்வமைப்பின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன், செயலாளர் அஜ்மல் சேக், செயற்குழு உறுப்பினர்கள் முகமது புஹாரி, சலீம், அபூபக்கர், உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...