Pages

Wednesday, December 5, 2018

ஷார்ஜாவில் SMS வழியாக நீண்டநேரதிற்கு வாகன நிறுத்த கட்டணம் செலுத்து வசதி அறிமுகம்!

அதிரை நியூஸ்: டிச.05
ஷார்ஜாவில் குறுஞ்செய்தி வழியாக நீண்டநேரத்திற்கு வாகன நிறுத்த கட்டணம் செலுத்து வசதி அறிமுகம்

ஷார்ஜாவில் தற்போது எதிஸலாத் (Etisalat) அல்லது டூ (Du) தொலைத்தொடர்புகளுடன் உள்ள மொபைல் போன்கள் வழியாக குறுஞ்செய்தி (SMS) அனுப்பி 1 மணிநேரத்திற்கு மட்டுமே பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது ஆனால் மிக விரைவில் 1 மணிநேரத்திற்கு மேலும் பார்க்கிங் ஸ்லாட்டுகளை குறுஞ்செய்திகள் மூலம் கட்டணம் செலுத்தி தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளும் வசதி அறிமுகமாகவுள்ளது.

அமீரக தொலைத்தொடர்பு நிறுவனங்களான எதிஸலாத் அல்லது டூ சேவைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குச் சொந்தமான அமீரக பதிவு எண் (vehicles with private registration no.) கொண்ட வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் செலுத்திட 5566 என்ற எண்ணுக்கு SMS செய்தால் போதுமானது, இதற்காக தனியாக முன்பதிவு ஏதும் செய்திட வேண்டியதில்லை. போஸ்ட் பெய்டு (Post Paid) சேவையுடையவர்களின் மாதாந்திர பில்லுடன் இந்த பார்க்கிங் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும், ப்ரீ பெய்டு (Pre Paid) சேவைதாரர்களின் மொபைல் பேலன்ஸிலிருந்து பார்க்கிங் கட்டணம் கழிக்கப்படும்.

கம்பெனி, ரென்ட் ஏ கார் போன்ற நமக்கு சொந்தமில்லாத, வாடகை வாகனங்கள் மற்றும் பிற வளைகுடா நாடுகள், வெளிநாட்டு நம்பர் பிளேட்டுகளையுடைய வாகன ஓட்டிகள் smsParking service என்ற ஆன்லைன் தளத்திற்குள் சென்று விபரங்களை பதிவு செய்து கொண்டால் அவர்களும் இந்த குறுஞ்செய்தி மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதியை பெறலாம். வாகன ஓட்டிகள் தங்களுடைய மொபைல் போனிலிருந்து எத்தனை வாகனங்களுக்கு வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொண்டு கட்டணம் செலுத்தலாம்.

வாகன ஓட்டிகள் குறுஞ்செய்திகள் மூலம் பார்க்கிங் சேவைகளை பெறும் போது அதற்கான அனுமதியையும் குறுஞ்செய்தி மூலமாகவே அனுப்பப்படும்(Motorists will receive a virtual permit via SMS), மேலும் பார்க்கிங் பதிவு செய்யப்பட்ட நேரம் முடிவதற்கு 10 நிமிடம் முன்னதாக ஞாபகமூட்டல் குறுஞ்செய்தி ஒன்று மொபைல் போன்களுக்கு வரும் (Reminder message 10 minutes before the permit expires), வாடிக்கையாளர்கள் தேவைப்பட்டால் நேரத்தை நீட்டித்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் 5566 என்ற எண்ணுக்கு அனுப்பும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் 0.38 பில்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...