Pages

Tuesday, January 1, 2019

சவுதியில் 2018 ம் ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு !

அதிரை நியூஸ்: ஜன. 01
சவுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையை விட்டுச் சென்றுள்ளனர்

கடந்த 2017 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் சவுதி அரேபியாவில் 9,367,593 பேர் வேலையில் இருந்துள்ளனர் ஆனால் நடப்பு 2018 ஆம் ஆண்டு அதே காலகட்டமான கடைசி 3 மாதங்களில் 8,813,236 மட்டுமே வேலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் சவுதியர்கள் மற்றும் வெளிநாட்டினர் என சுமார் 554,357 பேர் இதுவரை வேலையை விட்டுச் சென்றுள்ளதாக சமூக காப்புறுதிக்கான பொது அமைப்பு (General Organization for Social Insurance - GOSI) தெரிவித்துள்ளது.

ரியாத் மாகாணத்தில் 3.2 மில்லியன் பேரும், மக்காவில் 1.5 மில்லியன் பேரும், கிழக்கு மாகாணத்தில் 1.3 மில்லியன் பேரும் பணியில் உள்ளனர். இவற்றில் சமூக காப்புறுதிக்கான பொது அமைப்பின் சந்தாதாரர்களாக 1.9 மில்லியன் சவுதிக்களும், 7.4 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களும் உள்ளனர். இவற்றில் சவுதி மற்றும் வெளிநாட்டு ஆண்களின் எண்ணிக்கை சுமார் 8.5 மில்லியன், பெண்களின் எண்ணிக்கை 810,216.

சமூக காப்புறுதிக்கான பொது அமைப்பு என்ற இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, கடந்த 3 மாதங்களில் மட்டும் 7,776 பணியிட விபத்துக்கள் நேர்ந்துள்ளதாகவும், இந்த விபத்துக்களில் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 16 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மேலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,221 பேர். பிறர் சாலை விபத்துக்கள் மற்றும் அதீத சோர் போன்றவை பிற காரணங்களால் காயமடைந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளிலும் இன்னும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,372 பேர்.

சவுதி ஆண்கள் 427 பேர், சவுதி பெண்கள் 92 பேர், வெளிநாட்டு ஆண்கள் 7,186 பேர் மற்றும் வெளிநாட்டு பெண்கள் 72 பேர் பணியிட விபத்துக்களால் காயமடைந்துள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...