.

Pages

Tuesday, January 1, 2019

அதிரையில் துப்புரவுத் தொழிலாளியின் வங்கி கணக்கில் நூதன முறையில் பண மோசடி!

அதிராம்பட்டினம், ஜன-01,
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை மத்திய வங்கி கிளை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நூதன முறையில் ரூ. 30 ஆயிரம் மோசடி செய்திருப்பது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வாழைக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 85). இவரது மனைவி பாஞ்சாலி (வயது 83). இருவரும் அதிராம்பட்டினம் பேரூராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள். அசோகன், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைக்சாலையில் இயங்கும் அரசுடமையாக்கப்பட்ட மத்திய வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 30 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அசோகன் கூறியது;
நான், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைக்சாலையில் இயங்கும் அரசுடமையாக்கப்பட்ட மத்திய வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்த மாதம் டிச.6 ந் தேதி எனது வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தடுத்து ரூ.4999, ரூ.4999, ரூ.9999, ரூ.9999 என மொத்தம் ரூ.29,996 மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த நான் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு நேரில் சென்று விவரம் கேட்டதற்கு, ஆமாம் பணம் எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

எனது வங்கி கணக்கு பற்றிய விவரங்கள் நான் யாரிடமும் கூறாத நிலையில், பணம் மோசடி நடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில ஆண்டுகளாக நானும், எனது மனைவியும் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணம் பறிபோனது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இனி எனது மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள பணத்திற்கு நான் என்ன செய்வேன் என்றார் வருத்தத்துடன்.

இதுகுறித்து 'சமூக ஆர்வலர்' எம்.ஓ செய்யது முகமது புஹாரி கூறும் அறிவுரை;
'இதுபோன்ற நூதன முறையில் பண மோசடி செய்யும் சம்பவம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடக்கிறது. அண்மைகாலமாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வங்கி அலுவலர் எனக் கூறி டெலிபோனில் பேசும் நபர்களிடம்  நம்மை பற்றிய விவரங்கள் அல்லது வங்கி தொடர்பான எவ்வித தகவலும் தெரிவிப்பது தவறு. மேலும்,  தங்களது ஏடிஎம் கார்டுகளை அறிமுகமில்லாத நபர்களிடம் வழங்கி ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுத்து தர அறிவுறுத்த வேண்டாம். இவை ஆபத்தை விளைவிக்கும். மோசடி அழைப்புகளை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து அழைப்பு வரும் பட்சத்தில் அருகில் உள்ள காவல்துறையின் உதவியை நாடலாம். அல்லது ஏடிஎம் அட்டையின் பின்புறமுள்ள அவசர அழைப்பு எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

வங்கி வாடிக்கையாளர்கள் நூதன மோசடிகளில் சிக்கி ஏமாறுவதை தவிர்க்கும் பொருட்டு வங்கிகள் சார்பில் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ஒலிப்பெருக்கி அறிவிப்பு மூலம் எச்சரிக்கை செய்யவேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி சம்பந்தபட்ட வங்கிகளின் முன்புற பகுதிகளில் விழிப்புணர்வு அறிவிப்பு தட்டி வைக்க வேண்டும்.' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.