Pages

Saturday, January 26, 2019

அதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 70-வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அதன்படி, அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் குடியரசு தின விழாவிற்கு, அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து, குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார். இந்திய தேசியக் கொடியை அதிரை பைத்துல்மால் அமைப்பின் பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஏற்றி வைத்தார். செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார்.

முன்னதாக, அதிரை பைத்துல்மால் துணைச் செயலர் முஹம்மது இப்ராஹீம் வரவேற்றுப் பேசினார். முடிவில், துணைச் செயலர் எஸ். அப்துல் ஜலீல் நன்றி கூறினார். விழாவில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...