Pages

Tuesday, January 22, 2019

NEET / IIT-JEE தேர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.22
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இயங்கி வரும் கேரியர் பாயிண்ட் கல்வி நிறுவனம், அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான NEET / IIT-JEE தேர்வு விழிப்புணர்வு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை அய்யா மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான NEET / IIT-JEE தேர்வுகளை எளிதில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளையும், விளக்கங்களையும் ராஜஸ்தான் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மைய பயிற்றுநர் நித்தின், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் என்.ரகுபதி ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில், ராஜஸ்தான் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மையம் நடத்திய சிபி ஸ்டார் போட்டித்தேர்வில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகைக்கான வெகுமதி சான்றிதழ்களை ராஜஸ்தான் நிலம் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மைய பயிற்றுநர்கள் பிரசாத் ஜெயின், சேத்தன் சர்மா, சித்தார்த் ஆகியோர் வழங்கி பாராட்டுத்தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், டாக்டர் இளங்கோவன், வழக்குரைஞர் பிராகாசம், பி.அரவிந்த், சந்திரசேகரன், கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...