Pages

Thursday, January 24, 2019

சேதுபாவாசத்திரத்தில் TNTJ ரத்ததான முகாம் (படங்கள்)

பேராவூரணி, ஜன,24-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டிஎன்டிஜே) கிளை சார்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு டிஎன்டிஜே மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் வல்லம் பாட்ஷா, மாவட்டப் பொருளாளர் முடச்சிக்காடு அஷ்ரப், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் கொடையாளர்களிடமிருந்து 30 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனர்.

முகாமில் கிளைத் தலைவர் பாவா, செயலாளர் சேக் அப்துல்லா, பொருளாளர் ஜமால் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...