.

Pages

Friday, March 29, 2019

பேராவூரணியை மீண்டும் தென்னஞ் சோலையாக மாற்றுவேன் - எஸ்.எஸ். பழனிமாணிக்கம்!

பேராவூரணி மார்ச்.29-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஒன்றியப் பொறுப்பாளர் க.அன்பழகன் வரவேற்றார். கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியதாவது,
"கஜா புயலால் பாதிக்கப்பட்டு தென்னை விவசாயிகள் தவித்த போது, தென்னை வாரிய அதிகாரிகளை அழைத்தால், எவரும் செவிசாய்க்கவில்லை. காரணம் நம் கையில் அங்குசம் இல்லை. அதனால் யானையை அடக்க முடியவில்லை. அதிகார யானையை அடக்க, அங்குசத்தை (வாக்குகள்) தாருங்கள் என உங்களிடம் கேட்டு இங்கு வந்துள்ளேன்.

நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், கல்விக்கடன், விவசாயக்கடன், சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தென்னை வளர்ச்சி வாரியம் உதவியோடு, இப்பகுதி தென்னை விவசாயிகள் கவலை தீரும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் மீண்டும் தென்னஞ் சோலைகள் பூத்துக்குலுங்கும். தென்னை மீண்டும் வளர்ச்சி பெறும்.

மக்களின் கவலை உணருபவன் தான் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும். நவீன யுகத்தில் நாகரிக உடை அணியாமல் இப்படி இருக்கிறீர்களே என கேள்வி வந்தது. நான் அடிப்படையில் விவசாயி. விவசாயிகளின் பிரதிநிதி... நான் இப்படித்தான் இருப்பேன். இது தான் என்னுடைய இயல்பு" இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் ஏனாதி பாலசுப்பிரமணியன், கா.அண்ணாதுரை, கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி,  என்.அசோக்குமார், வை.ரவிச்சந்திரன், என்.செல்வராஜ், தனம் கோ.நீலகண்டன், இரா.இராஜரெத்தினம், சுப.சேகர், வி.பி.ஜெயச்சந்திரன்,
காங்கிரஸ் நிர்வாகிகள் து.கிருஷ்ணசாமி வாண்டையார், பண்ணைவயல் சு.ராஜாத்தம்பி, ஆர்.சிங்காரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆர்.சி.பழனிவேலு, வி.கருப்பையன், ஆர்.எஸ்.வேலுசாமி, ஏ.வி.குமாரசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இரா.திருஞானம், பா.பாலசுந்தரம், காசிநாதன், பன்னீர்செல்வம், சின்னத்தம்பி, திராவிடர் கழகம் வை.சிதம்பரம், மதிமுக உதயகுமார், வ.பாலசுப்பிரமணியன், மணிவாசகன், குமார், விடுதலை சிறுத்தைகள் கோட்டை அரசமாணிக்கம், அரவிந்த் குமார், இந்திய ஜனநாயக கட்சி ஜோசப், மனித நேய ஜனநாயக கட்சி அப்துல் சலாம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜெய்னுல் ஆபிதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மு.கி.முத்துமாணிக்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.