Pages

Tuesday, June 11, 2019

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் சிறுவர் விளையாட்டு அரங்கம் தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 2 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு அரங்கத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மீனா குமாரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி முகமது இப்ராஹீம் விளையாட்டு அரங்கை சிறுவர், சிறுமிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அரங்கில் ஏணி சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. ஊஞ்சல்களில் சிறுவர், சிறுமிகள் ஏறி ஊஞ்சலாடி மகிழ்ந்தனர். இவர்களுக்கு பாதுகாவலராக பெண் பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மவ்லவி முகமது இத்ரீஸ், கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...