Pages

Thursday, June 20, 2019

அதிராம்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 20
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்துறை சார்பில், திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், 10 பேர் கொண்ட மதுரை கிரீன் டிரஸ்ட் கலைக்குழுவினர் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை நடித்துக் காட்டினர்.

இதில் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மக்கும் குப்பை ~ மக்காத குப்பைகளை தரம் பிரித்தல், சாக்கடையில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் தீமைகள், மழை நீர் சேகரிப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து பாரம்பரிய கிராமியக் கலைக்குழுவின் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேலு செய்திருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...