Pages

Wednesday, June 5, 2019

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில் மாணவி தற்கொலை!

பட்டுக்கோட்டை, ஜூன் 05
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், கட் ஆஃப் மதிப்பெண் குறைந்துபோனதால் பட்டுக்கோட்டையில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரில் வசிப்பவர் நம்புராஜ். இவர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் கட்டணம் செலுத்தி இருசக்கர வாகனங்கள் பாதுகாக்கும் நிலையம் நடத்தி வருகிறார். இவரது மகள் வைஷியா (17). வைஷியா பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்து விட்டு மருத்துவம் படிக்க விரும்பி கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், வைஷியா 720-க்கு 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால், மருத்துவப் பட்டப்படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதுமானதல்ல என்பதால், மன வேதனைக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது.

அதன் விளைவாக, அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த இவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப் பதிந்து வைஷியா சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரத பரிசோதனை முடிந்த பின்னர் மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுபோல் திருப்பூரிலும் ரிதுஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு தற்கொலை செய்துகொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...