Pages

Monday, June 10, 2019

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 3 ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி இப்ன் அல் ஹைதம் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி முன்னாள் மாணவர் ஹாபிஸ் தஸ்லீம் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் கல்வியில், ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் தலை சிறந்த மாணவர்களை உருவாக்குவது பள்ளியின் முதன்மை நோக்கமாக இருப்பதாக குறிப்பிட்டு பேசினார். பள்ளி இணைச் செயலர் ஹாஜி எம்.எஸ் சைஃபுதீன் முன்னிலை வகித்தார்.

பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி முகமது இப்ராஹீம் வரவேற்று பேசுகையில்; எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் பள்ளி மாணவர்களை IAS ஆக உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவது, ஒவ்வொரு மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து  அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குவது. மத்திய, மாநில அரசுப்பணிகள், மருத்துவர்கள், தொழில் முனைவோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட பள்ளி மாணவர்களை தயார் படுத்துவது, பள்ளியில் கல்வி பயின்ற ஒவ்வொரு மாணவ மாணவிகளையும் சமூகநல சிந்தனையுடன், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக உருவாக்கும் முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டுவருவது குறித்து விளக்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில், இஸ்லாமிய மார்க்க கல்வியில் தலை சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் பள்ளி மக்தப் ஆசிரியர் குழுவினர் சார்பில், ஹாபிழ் முகமது அபூபக்கர், பள்ளியில் கல்வி பயின்று பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவர்கள் அதிராம்பட்டினம் கிராத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே சாகுல் ஹமீது, சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் அகமது அனஸ், எம்.எப் முகமது சலீம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து சேவைப் பணிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பள்ளி முன்னாள் மாணவர்களின் கருத்து கேட்பு நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு நேரிலும், வாட்ஸ்அப் மூலம் ஆலோசனைகள் வழங்கினர்.

முன்னதாக, பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் பள்ளி ஆற்றிவரும் சேவைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி விளக்கிப்பேசினார். நிகழ்சிகளை பவர் பாயிண்ட் ஒளித்திரை மூலம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மவ்லவி முகமது இத்ரீஸ் விளக்கிப்பேசினார். முடிவில் அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...