Pages

Friday, July 19, 2019

மக்காவில் ஹஜ் யாத்ரீகர்களின் இருப்பிடங்களுக்கு சென்று ஜம்ஜம் நீர் வழங்க ஏற்பாடு!

அதிரை நியூஸ்: ஜூலை 19
புனித மக்காவில் தங்கியுள்ள புனித ஹஜ் யாத்ரீகர்களின் இருப்பிடங்களுக்கே சென்று புனித ஜம்ஜம் நீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 3 கட்ட திட்டங்கள் மூலம் 200 ml ஜம்ஜம் நீர் அடங்கிய சுமார் 7 மில்லியன் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டம் தற்போது ஜித்தா ஏற்போர்டில் வந்திறங்கும் பயணிகளுக்கும் மக்காவின் தங்குமிடங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட திட்டத்தின் படி, மக்கா - ஜித்தா எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் மக்கா - மதினா எக்ஸ்பிரஸ் சாலை ஆகிய இரு மார்க்கங்களிலும் அமைந்துள்ள வழிகாட்டி மையங்களில் 4 குளிர்பதன அறைகளில் ஜம்ஜம் நீர் பாட்டில்கள் சேமித்து வைக்கப்பட்டு 134 களப்பணியாளர்கள் மூலம் 3.3 மில்லியன் ஜம்ஜம் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.

2 ஆம் கட்ட திட்டத்தின் வழியாக சுமார் 770 களப்பணியாளர்கள் மற்றும் 99 டிரக் வாகனங்களின் உதவியுடன் ஹஜ் சீசன் முழுவதும் 1.6 மில்லியன் ஜம்ஜம் தண்ணீர் பாட்டில்கள் ஹஜ் யாத்ரீகர்களின் தங்குமிடங்களுக்கு நேரில் சென்று வழங்கப்படும்.

3 ஆம் கட்டமாக, ஹஜ் கிரிகைகள் அனைத்தும் நிறைவுற்று தத்தமது தாயகங்களுக்கு திரும்பிச் செல்லவுள்ள ஹஜ் யாத்ரீகர்களுக்கு 2.4 மில்லியன் ஜம்ஜம் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படவுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...