Pages

Tuesday, July 23, 2019

புனித மக்கா ~ மதினா இடையே அதிவேக ரயில் சேவை அதிகரிப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 23
புனித ஹஜ் கிரிகைகளின் காலம் துவங்கியுள்ளதை அடுத்து ஹஜ் யாத்ரீகர்களின் நலனுக்காக ஹரமைன் அதிவேக ரயில்களின் சேவை வாரத்திற்கு 64 என அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் வாரத்திற்கு 80 சேவைகளாக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹரமைன் அதிவேக ரயில் (Haramain High Speed Railway - HHR) சேவை உலகின் அதிவேக 10 ரயில் சேவைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஜித்தா, புனித மக்கா, புனித மதினா இடையே சுமார் 450 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ரயில்வே பாதையில் கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம், கிங் அப்துல் அஜீஸ் எகனாமிக் சிட்டி (ரபீஹ்) ஆகிய நிறுத்தங்கள் மட்டுமே உள்ளது. இந்த ரயில் 2.15 நிமிடம் மதினாவை சென்றடைகின்றது. இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 300 கிலோமீட்டர்.

ஹரமைன் அதிவேக ரயில் சேவையில் 35 ரயில்கள் தலா 13 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன, இவற்றில் 4 பெட்டிகள் பிஸ்னஸ் வகுப்பு, 8 பெட்டிகள் எகனாமிக் வகுப்பு, 1 பெட்டி உணவாகமாகவும் செயல்பாடுகின்றன.

ஒரு ரயிலுக்கு 417 இருக்கைகள் என உள்ள இந்த ஹரமைன் ரயில் சேவையின் மூலம் ஜித்தா புனித மக்கா இடையே மணிக்கு சுமார் 19,500 பயணிகளும், புனித மக்கா புனித மதினா இடையே சுமார் 3,800 பயணிகளும் என வருடத்திற்கு சுமார் 60 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். இவர்களில் அனேக பயணிகள் ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்வோராகும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...