Pages

Thursday, July 25, 2019

சவுதி மினாவில் நடப்பாண்டு ஹஜ்ஜில் முதன் முதலாக அடுக்குமாடி குடில்கள் அறிமுகம்!

அதிரை நியூஸ்: ஜூலை 25
மினாவில் இந்த வருட ஹஜ்ஜில் அடுக்குமாடி குடில்கள் முதன்முதலாக அறிமுகம்

நடப்பு ஹஜ் காலத்தில் ஹஜ் வரலாற்றிலேயே முதன்முதலாக அடுக்குமாடி குடில்கள் (Tent) சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என அரபுநாடுகளிலிருந்து வரும் ஹஜ் பயணிகளுக்குரிய ஏற்பாடுகளை செய்து தரும் துவாபா நிறுவனம் (Tuwafa Establishment) தெரிவித்துள்ளது.

மினாவில் அமைக்கப்படும் இப்புதிய அடுக்குமாடி குடில்களின் தரைதளத்தில் பணியாளர்கள் தங்குவதுடன் உணவுப்பொருட்களும் சேகரித்து வைக்கப்படும், மேல்மாடியில் 8 ஹஜ் யாத்ரீகர்கள் வரை கூடுதலாக தங்க முடியும் என்பதால் எதிர்காலங்களில் ஹஜ் செய்யவரும் அதிகமானோருக்கு போதிய இடவசதிகள் மினா டெண்ட்டுகளில் கிடைக்கும்.

இந்த டெண்ட்டுகள் (குடில்கள்) தீப்பிடிக்காதவை, எளிதாக அகற்றி மடித்து வைத்து மீண்டும் பயன்படுத்தத்தக்கவை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...