.

Pages

Sunday, July 7, 2019

காரைக்குடி~ திருவாரூர் வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் நியமிக்காததை கண்டித்து அடையாள உண்ணாவிரதம்!

பட்டுக்கோட்டை ஜுலை 8
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், பட்டுக்கோட்டையில் 06.07.2019 சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு இரயில் பயணிகள் நல சங்கதலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கா.லெட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். செயலாளர் வ.விவேகானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. காரைக்குடி- பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல இரயில் பாதை இடையே உள்ள கேட்டுகளுக்கு, வேலை இல்லாமல் இருந்து வருகிற கேட்மித்ரா அல்லது தகுதி வாய்ந்த ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

2. காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருவாரூர்- மயிலாடுதுறை வரை மீட்டர் கேஜில் இயங்கியதுபோல தினசரி, பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும்.

3. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், தேவையுமான இரவு நேர விரைவு இரயிலை சென்னைக்கு இவ்வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் இரயில் நிலையங்களில் இதுவரை செப்பனிடப்படாத மின் கம்பங்கள், தண்ணீர் குழாய்கள், நிலைய பெயர்பலகை, மின் சாதனங்கள், மின் விசிறிகள் போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

5. பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் இரயில் நிலையங்களில் பயணிகள் தங்கும் அறைகள் மற்றும் கழிப்பிடங்களை இரயில் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

6. பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

7. அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

8. பட்டுக்கோட்டை இசபெல் பள்ளி அருகில் உள்ள எல்.சி.94 ஐ உடனடியாக சுரங்கபாதையாக மாற்ற வேண்டும்.

9. பட்டுக்கோட்டையில் உள்ள முன் பதிவு மையத்தின் பணிநேரத்தை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை  உள்பட இரவு 8.00 வரை பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

10. தம்பிக்கோட்டை மறவாக்காடு சால்ட் ரோட்டில் கட்டப்பட்டு வரும் உள்ள ரயில்வே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதத்தில் பட்டுக்கோட்டையில், தெருமுனை கூட்டங்கள், அடையாள உண்ணாவிரதம் இருக்க தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் எம். கலியபெருமாள் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்.ஸ்ரீதர், கே.செபஸ்தி, கே.சங்கர், எம்.ஹெச். நஜ்மூதீன், அசோக்குமார், திரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை  வழங்கினார்கள். துணை செயலாளர் ஜே. பிரின்ஸ் விசயகுமார் நன்றி கூறினார்.
 
 
 
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.