Pages

Friday, July 5, 2019

சவுதியில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு இந்திய ஹஜ் மிஷன் சார்பில் சிறப்பான ஏற்பாடு!

அதிரை நியூஸ்: ஜூலை 05
இந்திய தூதரகம் மற்றும் இந்திய ஹஜ் கமிட்டி ஆகிய ஒருங்கிணைந்த இந்திய ஹஜ் மிஷன் சார்பாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மதினா வந்திறங்கிய முதல் இந்திய புனித ஹஜ் குழுவினர் மதினா மாநகரின் மத்திய பகுதியில் புனித மஸ்ஜிதுன் நபவி பள்ளியின் அருகில் ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஹஜ் மிஷன் சார்பாக யாத்ரீகர்களுக்கான இலகுவான பயண ஏற்பாடுகள், மருத்துவ முன்னேற்பாடுகள், தங்குமிட வசதிகள், பொருட்களை எளிதாக கொண்டு செல்வது, 24 மணிநேர உதவி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பல வருடங்களாக புனித மக்காவில் நடைமுறையில் உள்ளதைப் போல் இந்த வருடம் முதல் புனித மதினா வந்திறங்கும் ஹஜ் குழுவினர் இந்தியாவிலிருந்து புறப்படுமுன்பே அவர்களுக்கான தங்குமிடங்கள் உறுதி செய்யப்பட்டு "செக் இன்" செய்யப்படுகின்றன, விமான நிலையத்திலிருந்து வரும் ஹஜ் பயணிகள் நேரடியாகவே தங்குமிடமிடங்களுக்குள் சென்றுவிடலாம் என்பதுடம் அவர்களது லக்கேஜிலும் தங்குமிடங்கள் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய "வில்லை" (Tag) ஒன்றும் இணைக்கப்படுகின்றது.
இந்திய ஹஜ் மிஷன் சார்பாக மதினாவில் முதன்மை அலுவலகம் ஒன்றும் 3 கிளை அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன. மதினா விமான நிலையத்தில் ஒரு 24 மணிநேர உதவி அலுவலகமும், சிகிச்சை மையம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் மதினா நகரினுள் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்காக 10 படுக்கைகளுடன் கூடிய ஒரு முதன்மை சிகிச்சை மையமும் 3 கிளை சிகிச்சை மையமும் திறக்கப்பட்டுள்ளன.

புனித மக்காவில் 16 கிளை உதவி அலுவலகங்கள், மொத்தம் 80 படுக்கைகளுடன் கூடிய 3 மருத்துவமனைகள், 16 மருத்துவ சிகிச்சை மையங்களுடன் ஜித்தா விமான நிலைய ஹ்ஜ் டெர்மினலில் 24 மணிநேரமும் இயங்கும் துணை உதவி மையமும் ஒரு மருத்துவ சிகிச்சை மையமும் திறக்கப்பட்டுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...