Pages

Monday, August 5, 2019

பிரிலியண்ட் CBSE பள்ளியில் மாவட்ட அளவிலான எரிபந்து விளையாட்டு போட்டி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 05
அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் திருச்சி சி.பி.எஸ்.இ மண்டல ராக்சிட்டி சகோதயா சார்பில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையியான எரிபந்து விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

போட்டியை பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஆர். ஜெயபால் அவர்கள் துவக்கி வைத்தார். 14 வயதுக்குட்பட்ட இளையோர் எரிபந்து விளையாட்டு போட்டியில் மணப்பாறை காவேரி பள்ளி முதலாவது இடமும் பிரிலியண்ட் பள்ளி இரண்டாவது இடமும் பெற்றது. 19 வயதுக்குட்பட்ட முதியோர் எரிபந்து போட்டியில் மணப்பாறை காவேரி பள்ளி முதலாவது இடமும், திருச்சி அமிர்தா வித்லாயா பள்ளி இரண்டாவது இடமும் பெற்றது. வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஆர். ஜெயபால் கேடயமும் சான்றிதர்களையும் வழங்கினார்.

விழாவிற்கு பள்ளித் தாளாளர்  வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் என். ரகுபதி முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் யு.சிலம்பரசன் எஸ். அனிதா, என். சுகன்  ஆகியோர் செய்திருந்தனர். இதில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
  
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...