Pages

Thursday, September 26, 2019

அதிரை மைதீன் திமுகவில் இணைந்தார்!

அதிராம்பட்டினம், செப். 26
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அதிரை மைதீன் (வயது 28). பட்டதாரி இளைஞர். தனது சிறு வயது முதல் சமூகப் பணியில் அதிக ஈடுபாடு கொண்டவர். தனது 17 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கினார். காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் பல்வேறு பொறுப்புகள் வகித்து திறம்பட செயலாற்றியவர்.

இந்நிலையில், திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளருமான மு.காந்தி, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆரோ.அருள், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அவருடன், 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...