Pages

Sunday, September 22, 2019

'நல்லாசிரியர்' விருது பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 22
'நல்லாசிரியர்' விருது பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

'நல்லாசிரியர்' பி.சுதாகர்
அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பி.சுதாகர். இவரது கல்விச்சேவையைப் பாராட்டி, அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகளின் பரிந்துரையின் பேரில், பன்னாட்டு அரிமா சங்கங்களின் சார்பில், பெரம்பலூரில் இன்று (செப்.22) ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆசிரியர் தின விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ஜெ.கார்த்திக் பாபு, பள்ளி ஆசிரியர் பி.சுதாகருக்கு 'ஞானச்சுடர்' விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பி.சுதாகருக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல், செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் மற்றும் நிர்வாகிகள், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளித் தாளாளர் என்.உதயகுமார், பள்ளி மேலாளர் யு. பாலாஜி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...