Pages

Sunday, September 8, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் திறன்மிகு வகுப்பு தொடக்கம் மற்றும் MBA முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு!

அதிராம்பட்டினம், செப்.08
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் திறன்மிகு வகுப்பு (ஸ்மார்ட் கிளாஸ்) தொடக்கம் மற்றும் எம்.பி.ஏ முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல்ஹசன் கலந்து கொண்டு, எம்.பி.ஏ மாணவர்களுக்காக கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட திறன்மிகு வகுப்பறையை (ஸ்மார்ட் கிளாஸ்) திறந்து வைத்தார்.

கல்லூரி முதல்வர் எம். முகமது முகைதீன் தொடக்க விழா உரை நிகழ்த்தினார். வணிக ஆட்சியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏ.முகமது நாசர் வரவேற்றுப் பேசினார். முடிவில், பி. முகமது இத்ரீஸ் நன்றி கூறினார்.

விழாவில், கல்லூரிப் பேராசிரியர்கள், எம்.பி.ஏ முதலாமாண்டு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...