.

Pages

Wednesday, December 18, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 73-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 13-12-2019 அன்று பத்ஹா RT-RESTUARENT முதல் மாடியில் நிஜாமுதீன் இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை       : A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)
சிறப்புரை              : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை      : P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )

தீர்மானங்கள்:
1) ABMR-ன் 72-வது கூட்டத்தின் வேண்டுகோளை ஏற்று அதற்கான பதில் ABM-HO கடிதத்தை இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் சிறப்பாக நமது சேவை தொடர துஆ செய்யுமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அரசு சலுகைகளை முழு முயற்சியோடு நமதூர் வாசிகள் பயன்படும் அளவுக்கு முழு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) தற்சமயம் நகைக்கடன் மிக செம்மையாக மக்கள் முழு பயனுள்ளவகையில் உண்மையான தேவை அறிந்து கடன் விநியோகம் செய்யப்படுவதையும் அதுபோல் நமது மக்களும் அதை சரியான காலக்கெடுக்குள் திருப்பிடுவது விசயமாக ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) ரியாத் சார்பாக நிரந்தர ABM உறுப்பினர்கள் எண்ணிக்கை சேர்க்கும் விதமாக பல புதிய பழைய நபர்களின் விபரங்களை தலைமையகத்துக்கு அனுப்பி கொடுக்கப்பட்டு அதன் மூலம் ரிஜிஸ்ரேஷன்  ( REGISTERATION ) விஷயமாகவும் நிரந்தர ID CARD ஏற்பாடு செய்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

4) நமது உழைப்பிற்காக வெளிநாடு சென்று வேலை செய்ய கூடிய நபர்களும் நமதூர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில அறிவு என்பது இக்கால கட்டத்தில் இன்றியமையாத ஒன்று அதன் பொருட்டு இம்மாதமுதல் ஆரம்பிக்க உள்ள ( SPOKEN ENGLISH ) நமதூர் வாசிகள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ஆதரவற்ற ஏழைகளின் திட்டமான மாதாந்திர பென்ஷன் விஷயமாக வரும் 2020-க்கான பென்ஷன் திட்டத்திற்கு இதுவரை பெயர் தராத சகோதரர்களிடம் ஆதரவு தந்து அதன் நன்மையை அடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) ஊர் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும், ஊர் நலனை நாடக்கூடிய வண்ணம் அமைக்கப்பட்டு மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த ABMR-ன் ரியாத் கிளையை மேலும் வலுவூட்டும் வண்ணம் நமதூர் விடுபட்ட அதிரை சாகோதரர்களை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பை ஏற்படுத்தி இந்த சேவை இன்னும் சிறப்பாக நடத்திட மேலும் பொருளாதாரம் திரட்டும் வண்ணம் நமதூர் சகோதரர்களின் ஆதரவை நாடுவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான நமதூர் அனைத்து தெருவாசிகளும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) இக்கூட்டத்தில் நமதூரில் கடந்த இரு வாரங்களில் இறையடி சேர்ந்த மூவர்களான ஊர் தலைவர் சமூக சேவகர் ஹாஜி மர்ஹும் M.M.S.சேக் நசுருதீன் காக்கா, சகோ.மர்ஹும் யூசுப் ( S/O. மியன்னா காக்கா ), சகோ,மர்ஹும் முஹம்மது ராவுத்தர் ( மாற்று திறனாளிகளின் பாதுகாப்பு உரிமைகளின் நலச்சங்கத்தின் தலைவர் ) இவர்களுக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டு இவர்களின் ஹக்கில் துஆ செய்யுமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

8) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு JANUARY 2020 10-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் இஷா தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.