.

Pages

Monday, December 16, 2019

CBD அமைப்பின் சார்பில், 54 இரத்த கொடையாளர்களை பாராட்டி விருதுகள் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.16
கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பின் சார்பில், 54 இரத்த கொடையாளர்களை கெளரவித்து விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் (CBD) மதுக்கூர் கிளை சார்பில், சமூக விழிப்புணர்வு மற்றும் இரத்தக் கொடையாளர்களை பாராட்டி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மதுக்கூர் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் கிளைத்தலைவர் ஜெ. இஜாஸ் அகமது தலைமை வகித்தார்.

அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு பேசியது; 
'மாணவச் செல்வங்கள் வழிமாறிச் செல்லும் வேளையில் இதுபோன்ற உயிர்காக்கும் பணிகள் செய்திடும் இளைஞர்களை ஊக்கப் படுத்தவேண்டும். இந்த அமைப்பின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சமூகத்தினருக்கு பல்லாயிரக்கணக்கான லிட்டர் இரத்தம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இரத்த தான சேவையில் மாணவச் சமூகங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்' என்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், டாக்டர். குமுதா லிங்கராஜ், பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கணேச மூர்த்தி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத்தலைவர் வ. விவேகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர், அதிகமுறை இரத்தம் வழங்கிய இரத்தக்கொடையாளர்கள் ஏ.சாகுல் ஹமீது, ஆரிப், அஃப்ரித்கான், ஜாகிர், அலெக்ஸ், சமீர் அலி உள்ளிட்ட 54 பேருக்கு விருதுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மேலும், கஜா புயலின் போது பாதிப்படைந்த பகுதிகளில் மீட்டுப் பணியில் தீவிரமாக செயல்பட்ட மதுக்கூர் மின்சார வாரியம், பேரூராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு சேவை விருதுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, அவ்வமைப்பின் மதுக்கூர் கிளை துணைத் தலைவர் எச். முகமது இப்ராஹீம் வாரவேற்றார். நிறைவில், அவ்வமைப்பின் மதுக்கூர் கிளை துணைச் செயலாளர் எம்.ரியாஸ் அகமது நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பளார் எம்.எஸ் குர்ஷித் ஹுசைன், லோகேஷ், மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் தலைவர் டி.ஏ.கே.ஏ முகைதீன் மரைக்காயர், மதுக்கூர் காவல் ஆய்வாளர் ஆர்.செந்தில் குமார், சித்த மருத்துவர் வி.கீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அவ்வமைப்பின் மதுக்கூர் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.