Pages

Wednesday, January 22, 2020

CAA,NRC,NPR க்கு எதிராக அதிரையில் பெண்கள் மாநாடு: ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன. 22
எஸ்டிபிஐ கட்சி சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக, அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் (30-01-2020) அன்று  வியாழக்கிழமை நடைபெற உள்ள பெண்கள் மாநாட்டையொட்டி பெண்கள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் என்.ஷாஃபியா தலைமை வகித்து பேசினார். அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என். முகமது புஹாரி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பின் பேரில், வழக்குரைஞர் இசட். முகமது தம்பி கலந்துகொண்டு சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்தார். முன்னதாக, எஸ்.டி.டி.யூ அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகமது அஸ்லம் வரவேற்றுப் பேசினார்.

100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது, மாநாட்டில் பெண்களை அதிகளவில் பங்கேற்க வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...