Pages

Tuesday, January 28, 2020

'கல்வித்தந்தை' ஹாஜி S.M.S ஷேக் ஜலாலுதீன் நூற்றாண்டு துவக்க விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.28
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 'கல்வித்தந்தை' ஹாஜி S.M.S ஷேக் ஜலாலுதீன் நூற்றாண்டு துவக்க விழா இன்று (28.01.2020) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.பாலசுப்ரமணியன் நூற்றாண்டு விழாச் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசினார். கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் என். நல்ல முகமது, இலவச காலைச்சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். தஞ்சாவூர் ஆற்றங்கரை பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. ஏ.அப்துர் ரஹ்மான் மன்பஈ சிறப்பு கல்வி உதவித்திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

விழாவில், கல்லூரி முன்னாள் முதல்வர்கள், முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கலந்து கொண்டு கல்லூரி நிறுவனர் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை, கல்லூரி பொருளியல் துறைத்தலைவர் பி.கணபதி தொகுத்தளித்தார். நிறைவில், கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...